For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TVKMaanadu | தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் என்னென்ன? முழு விவரம் இதோ!

06:21 PM Oct 27, 2024 IST | Web Editor
 tvkmaanadu   தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் என்னென்ன  முழு விவரம் இதோ
Advertisement

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தவெகவின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் வெளியிட்டார்.

Advertisement

தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று ( அக்.27ம் தேதி) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டியில் தவெக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பறையாட்டம், நாட்டுப்புற பாடல்கள் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. சரியாக நான்கு மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அவரை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக்கம்பத்தில் ரிமோட் மூலம் அக்கட்சி தலைவர் விஜய் ஏற்றி வைத்தார். பின்னர், தவெக மாநாட்டில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியானது.

இதையும் படியுங்கள் : விஜய்யின் #TVK மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்?

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் தவெகவின் தொண்டர்களே அறிவிப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் விஐய் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் தவெகவின் தொண்டரான பேராசிரியர் சம்பத்குமார் வெளியிட்டார்.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள்

தவெக கோட்பாடு : பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும்.மக்கள் யாவரும் பிறப்பால் சமம்.பாரபட்சமற்ற சமநிலைச் சமூகம் படைப்பதே கோட்பாடு.

தவெக குறிக்கோள் : மதம், சாதி, நிலம், இனம், பாலின அடையாளம், பொருளாதாரம் என்கிற தனி அடையாளங்களுக்குள் மனித சமூகத்தை சுருக்காது தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் தனிமனித, சமூக, அரசியல், பொருளாதார உரிமைகளை நிலை நிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது தவெக குறிக்கோளாகும்.

தவெக கொள்கைகள் : மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் (secular, social justice, ideology)

ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சார்ந்த இடம், மொழி, சாதி, பாலினம் என பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது. ஆட்சியதிகாரம், சட்டம், நீதி அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெகுஜன மக்களின் அடிப்படை சுதந்திர உரிமைகளை பறிக்கும் மாநில, மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது.

இட ஒதுக்கீடு அல்ல, விகிதாச்சார இடப்பங்கீடு

இட ஒதுக்கீடு அல்ல, விகிதாச்சார இடப்பங்கீடு உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சாதி முழுவதுமாக ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்து பிரிவினர்களும், அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் முக்கியத்துவம் வழங்குவது தமிழக வெற்றி கழகத்தின் சமதர்ம சமூக நீதியாகும்.

சமத்துவம்

சாதி மதம் இனம் நிறம் மொழி பொருளாதாரம் வர்க்கம் மற்றும் பாலின சமத்துவத்திற்குரிய உரிமை, எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லா வகையிலும் எல்லோரும் சமமானவர்கள் என்பது நம்முடைய சமத்துவம்.

மதச்சார்பின்மை

மதச்சார்பற்ற தனிப்பட்ட மத நம்பிக்கைகளிலும் அனைத்து மதத்தினரையும், மத நம்பிக்கை அற்றவர்களையும் சமமாக பாவிக்கும் ஆட்சி நிர்வாகம் தான் தமிழக வெற்றி கழகத்தின் மதச்சார்பின்மை கொள்கை.

மாநில தன்னாட்சி

மாநில தன்னாட்சியின் உரிமையை அந்தந்த மாநில மக்களின் தலையாய உரிமை.
இந்த உரிமைகளை மீட்பது தமிழக வெற்றி கழகத்தின் உரிமை ஆகும்.

இருமொழிக் கொள்கை

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றுகிறது தமிழக வெற்றி கழகம்.
தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி. தமிழ் வழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் . அரசியல் தலையீடற்ற அரசியல் உரிமைகளை நிலைநாட்டும் நிர்வாகம். அரசு மற்றும் தனியார் துறைகளில் எந்த துறையிலும் அரசியல் தலையீடற்ற லஞ்ச லாவண்யம் ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வருவோம். மதம், இன,மொழி, வர்க்க பேதமற்ற வகையில் கல்வி சுகாதாரம் தூய குடிநீர் எல்லோருக்குமான அடிப்படை உரிமை.

தீண்டாமை ஒழிப்பு

இயற்கை சுற்றுச்சூழலை காப்பது அரசின் கடமை. பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது, தீண்டாமை ஒழிப்பு, பழமை வாத பழக்கவழக்கங்களை நிராகரிப்பது தீண்டாமை ஒழிப்பின் முதல் படி ஆகும்.

போதையில்லா தமிழ்நாடு

உடல் நலன்களை கெடுக்கும் சமூக சீர்கேடுக்கு வழி வகுக்கும் போதை இல்லாத தமிழ்நாட்டை படைப்போம் என்பது தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை கொள்கை.

இவ்வாறு தவெகவின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.

Tags :
Advertisement