#TVK மாநாட்டுத் திடலில் விஜய் நேரில் ஆய்வு!
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுத் திடலில் ஏற்பாடுகளை அக்கட்சித் தலைவர் நேரில் விஜய் ஆய்வு செய்தார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கினார். அதன் பிறகு தேர்தல் ஆணையத்தில் பதைவு செய்யப்பட்ட பின் கட்சியின் கொடி, பாடல் என ஒவ்வொன்றாக வெளியிட்டப்பட்டது. தவெக முதல் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், மழை உள்ளிட்ட சில காரணங்களால் மாநாடு தேதி அறிவிப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை(27.10.2024) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறவுள்ளது. தவெக மாநாடுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கட்சி தொண்டர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தவெக மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நாளை (27.10.2024) போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி எதிரொலி! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் சில புள்ளிகளை இழந்த இந்திய அணி!
50,000 இருக்கைகளுடன் பிரமாண்டமாக தயாராகி வரும் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற தேசிய தலைவர்ளுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாடு ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய் மாநாடு நடைபெற உள்ள திடலில் ஆய்வு செய்தார். இதனை அடுத்து புதுச்சேரி அருகே விஜய் தங்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.