Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TVK முதல் மாநாட்டிற்கான பந்தக்கால் நடப்பட்டது!

07:12 AM Oct 04, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.

Advertisement

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, பல்வேறு தடைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்கான பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பல்வேறு குழுக்களை அமைத்து மாநாடு பணிகளை கவனித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : மகளிர் #T20WorldCup | இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்!

இந்நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக மாநாட்டு மேடை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தவெகவின் பொதுசெயலாளர்  புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோயில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட புனித நீர் கொண்டுவரப்பட்டு பந்தகாலில் ஊற்றப்பட்டன.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1000 - த்திற்கும் மேற்பட்டோர் அதிகாலையில் நடைபெற்ற இந்த பந்தக்கால் நடும் விழாவில் கலந்துகொண்டனர். இதையடுத்து, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.

Tags :
Bhoomi PujaNews7Tamilnews7TamilUpdatesPandakaltvk
Advertisement
Next Article