Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க இடைக்கால தடை!

12:37 PM Aug 02, 2024 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த போது பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 

Advertisement

கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை. வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிகாரிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு தொடர்பாக மனுதாரர் ஹென்றி திபேன் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Tags :
gun shotmadras highcourtsterliteSupreme courtThoothukudi
Advertisement
Next Article