தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம்.!
தமிழ்நாடு வெற்றி கழக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு தனது கட்சியின் கொள்கை மற்றும் தேர்தலில் நேரடியாக களமிறங்குவது அதிகாரப்பூர்வ அறிவிப்பை 3பக்க அறிக்கையாக வெளியிட்டார்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக செயற்குழு உறுப்பினர்களுக்கு காணொலி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியதாக தவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் கூறியதாவது:
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் திமுக-விற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததால் தவெக-கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பில்லா ஜெகன் தொடர்ந்து திமுகவிற்கு ஆதரவாக பேசி வந்ததாகவும் இரண்டு கட்சியில் ஒரு நபர் செயல்பட முடியாது என தெரிவித்த நிலையிலும் திமுக மற்றும் தவெக என இரண்டு கட்சியில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த இரண்டு முறை கண்டித்தும் அவர் அதே செயல்பாட்டில் இருந்ததால் பில்லா ஜெகனை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசித்து அவர் கட்சியில் தொடர்வாரா இல்லை நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்கப்படுவரா என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.