துருக்கி உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி - பின்னடைவில் அதிபர் எர்டோகன்!
11:47 AM Apr 02, 2024 IST
|
Web Editor
இஸ்தான்புல்லில் குடியரசு மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய மேயர் எக்ரேம் இமாமோக்லு வெற்றி பெற்றுள்ளார். மான்சுர் யவாஸ் அங்காராவில் மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 81-ல் 36 நகரங்களில் குடியரசு மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எர்டோகன் கட்சி 24 மாகாணங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எதிர்க்கட்சிகளிடம் இழந்த நகர்ப்புற உள்ளாட்சி இடங்களை மீட்டெடுத்து தனது செல்வாக்கை நிரூபிக்க முயன்றார் எர்டோகன். ஆனால், எர்டோகனுக்கு மீண்டும் தோல்வி கிடைத்துள்ளது.
Advertisement
துருக்கியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
Advertisement
துருக்கியில் நேற்று மேயர் உள்ளிட்ட நகர நிர்வாக பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், துருக்கியின் தலைநகர் அங்காரா, இஸ்தான்புல் ஆகிய நகரங்களில் அதிபர் எர்டோகன் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.
Next Article