”அதிமுகவை மீட்டு தாருங்கள் என யாரும் டிடிவி தினகரனிடம் கேட்கவில்லை”- ஆர்.பி. உதயகுமார் பேட்டி..!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர்,
”வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்த்திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள 60 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது . மீதம் 20 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. SIR குறித்து அச்சம் தேவையில்லை.
அமமுக கட்சி நடத்தும் டிடிவி தினகரன் திடீரென அதிமுக -வை காப்பற்ற புதிய அவதராம் எடுத்துள்ளார். ஒரு தேர்தலில் கூட அமமுக வெற்றி பெறவில்லை. டிடிவி தினகரன் எடுப்பது பழைய படம், புதிய காப்பி. அதிமுகவை மீட்டு தாருங்கள் என யாரும் டிடிவி தினகரனிடம் கேட்கவில்லை.
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.அதை திசை திருப்பும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கன்னியாகுமரி முதல் சென்னை வரை மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள். செங்கோட்டையன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என எனக்கு எப்படி தெரியும்? ” எனத் தெரிவித்தார் .