தேனியில் டிடிவி தினகரன் , திருச்சியில் செந்தில்நாதன் போட்டி - அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
08:59 AM Mar 24, 2024 IST
|
Web Editor
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிகள் இறுதியான நிலையில் தொகுதி பங்கீடும் வெற்றிகரமாக நிறைவுற்று வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் அமமுக போட்டியிடும் தேனி மற்றும் திருச்சி தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். அதன்படி தேனியில் டிடிவி தினகரன் மற்றும் திருச்சியில் செந்திநாதன் ஆகியர் போட்டியிட உள்ளனர்.
Advertisement
தேனியில் டிடிவி தினகரன் , திருச்சியில் செந்தில்நாதன் ஆகியோர அமமுக வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
Advertisement
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளன. அதோடு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இதன் ஒரு பகுதியாக இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை ஒட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Next Article