For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து #TTF வாசன் நீக்கம்! - இயக்குநர் செல்அம் அறிவிப்பு

12:34 PM Oct 01, 2024 IST | Web Editor
 மஞ்சள் வீரன்  படத்திலிருந்து  ttf வாசன் நீக்கம்    இயக்குநர் செல்அம் அறிவிப்பு
Advertisement

'மஞ்சள் வீரன்' படத்திலிருந்து TTF வாசன் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் செல்அம் அறிவித்துள்ளார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய பைக் அனுபவங்கள் குறித்து youtube சேனலில் பதிவிட்டு வந்தார். அதாவது இவர் அதிவேகமாக பைக்கில் சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து youtube இல் பதிவேற்றம் செய்து வந்தார். அதன் பிறகு அவர் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில் போக்குவரத்து விதிகளை மீறிய  குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன் பிறகு அவருடைய ஓட்டுநர் உரிமம் 10 வருடங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தும் திருப்பதி கோயிலில் பக்தர்களை பிராங்க் செய்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினார். இந்நிலையில் டிடிஎஃப் வாசன் இயக்குநர் செல் அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கூட வெளியானது. ஆனால் தற்போது மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதாக அந்த படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார் அதோடு படத்தின் புதிய ஹீரோ குறித்த அறிவிப்பு அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement