"வாய்மையே வெல்லும்" - கௌதம் அதானி பதிவு!
இந்திய தொழில் அதிபர்களில் முக்கியமானவர் கௌதம் அதானி. அமெரிக்காவின் ஹுண்டன்பர்க் நிறுவனமானது கௌதம் அதானியின் குழுமமானது பங்குகளின் விலையை செயற்கையாக அதிகரித்ததாகவும் கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அதானி மறுத்து வந்தார். இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமானது (செபி) அதானி மீதான ஹுண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானது என்று அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபியின் விசாரணை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் எப்போதும் கூறி வந்தோம். தற்போது செபியின் முழுமையான விசாரணையானது அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை எப்போதும் அதானி குழுமத்தை வரையறுத்துள்ளன.
இந்த உள்நோக்கம் கொண்ட அறிக்கையால் பணத்தை இழந்த முதலீட்டாளர்களின் வலியை நாங்கள் ஆழமாக உணர்கிறோம். தவறான கதைகளைப் பரப்பியவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்தியாவின் நிறுவனங்கள், இந்திய மக்கள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது.
வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!” என்று தெரிவித்துள்ளார்.