For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்; ஆபத்தை உணராமல் பயணிக்கும் பொதுமக்கள்...

04:50 PM Nov 16, 2023 IST | Web Editor
துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்  ஆபத்தை உணராமல் பயணிக்கும் பொதுமக்கள்
Advertisement

மயிலாடுதுறை அருகே பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைபாலத்தில், பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருசக்கர ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பாலத்தின் ஒரு பகுதி வழியே செல்கின்றனர்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம்,  மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் என்ற ஊரில் பழவாற்றின் குறுக்கே 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது. இப்பாலம் சிறிய பாலமாக இருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தி விட்டு சுமார் ரூ.6.47 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.  இதற்காக பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில்,  ஆற்றின் குறுக்கே மணல் மூலம் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதன் வழியே இருசக்கர மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன.

நமச்சிவாயபுரம் , கல்யாண சோழபுரம்,  கடலங்குடி,  பூதங்குடி, உத்திரங்குடி  உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மயிலாடுதுறை மற்றும் திருமணஞ்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பாலம் வழியே தான் செல்ல வேண்டும். சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வடிந்து வருகிறது. இந்த தண்ணீர் அதி வேகத்துடன் சந்திப்பதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள்
ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் பாலத்தின் ஒரு பகுதி வழியே கடந்து
செல்கின்றனர்.  பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 15 க்கும் மேற்பட்ட
கிராமத்தினர் மயிலாடுதுறை செல்வதற்கு 15 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல
வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைந்து பாலத்தை கட்டும் முடிக்க வேண்டும்
என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement