#TRUMPvsKAMALAHARRIS | நேரடி விவாதத்தில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் நடந்த நேரடி விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் இவர்கள் இருவரும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் பொருளாதாரம், குடியேற்றம், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர், நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த இந்த நேரடி விவாதத்தில் வெற்றி பெற்றது யார்? என்பது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின.
இதில் டிரம்பை, கமலா ஹாரிஸ் பின்னுக்கு தள்ளினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிசுக்கு 63 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 37 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கமலா ஹாரிஸ்
இத்தகைய சூழலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாவதாக விவாதம் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக இனி கமலா ஹாரிசுடன் 2வது முறையாக விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.