Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆப்கானிஸ்தானில் விமான தளத்தை கேட்டு மிரட்டிய டிரம்ப் - தாலிபான்கள் நிராகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை களமிறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
07:15 AM Sep 22, 2025 IST | Web Editor
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை களமிறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
Advertisement

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். சீனாவின் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தானின் பஹ்ராம் விமானப்படை தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே தாலிபான்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Advertisement

இது தொடர்பாக பேசியவர், "பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் "விரைவில்" திருப்பித் தர வேண்டும். அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்" என்றார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் மிரட்டலை தாலிபான் அரசு நிராகரித்துள்ளது.

இத்தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி "சிலர் அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் தளத்தை மீண்டும் பெற பேச்சுவார்த்தை நடந்த விரும்புகின்றனர். ஆனால் எந்த ஒப்பந்தத்தின் மூலமும் ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது." என்று தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அரசு, "நாட்டின் சுதந்திரம் மற்றும் நிலையான ஒருமைப்பாடு மிக முக்கியமானவை" என தெரிவித்துள்ளது.

 

Tags :
afghanistanAmericadonaldtrumprejectsTalibanTrump
Advertisement
Next Article