For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிபரான டிரம்ப்... பதவி விலகிய விவேக் ராமசாமி!

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான நிலையில் DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார்.
12:05 PM Jan 21, 2025 IST | Web Editor
அதிபரான டிரம்ப்    பதவி விலகிய விவேக் ராமசாமி
Advertisement

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று பதவியேற்றார். இந்நிலையில் அமெரிக்க அரசின் திறன் துறை அமைப்பான DOGE-யின் இணைத்தலைவர் பதவியில் இருந்து, இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி விலகியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Advertisement

அமெரிக்க அரசின் நிர்வாகத்தை திறன்பட மேம்படுத்தும் முக்கிய அமைப்பான DOGE அமைப்பு எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு ராமசாமி DOGE இலிருந்து விலகுவது உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டுள்ள ராமசாமி,
“DOGE உருவாக்கத்தை ஆதரிப்பது எனது கடமை. அரசை சீரமைப்பதில் எலானும், குழுவும் வெற்றிப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஓஹியோவுடனான எதிர்கால திட்டத்தை விரைவில் கூறுவேன். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற அதிபர் டிரம்பிற்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார். இதனையடுத்து துணை அதிபராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவியும் ஜேடி வான்ஸ்க்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இப்பதவியில் இருந்தும் விவேக் ராமசாமி விலகியுள்ளார். DOGE குழுவில் இருப்பவர்களுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags :
Advertisement