For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கமலுடன் த்ரிஷா! வைரலாகும் 'தக் லைஃப்' படபிடிப்பு தள புகைபடம்!

03:15 PM May 31, 2024 IST | Web Editor
கமலுடன் த்ரிஷா  வைரலாகும்  தக் லைஃப்  படபிடிப்பு தள புகைபடம்
Advertisement

தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகை த்ரிஷா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.  இந்த திரைப்படத்தில் த்ரிஷா,  நாசர்,  அபிராமி,  கௌதம் கார்த்திக்,  ஜோஜு ஜார்ஜ்,  ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.  இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்,  மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன.

இந்த திரைப்படத்தில் நடிக்கவிருந்த ஜெயம் ரவி,  துல்கர் சல்மான் கால்ஷீட் கிடைக்காத நிலையில் விலகியுள்ளனர்.  இந்நிலையில், துல்கர் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – மத்திய அரசுக்கு டெல்லி அமைச்சர் அதிஷி கடிதம்!

தக் லைஃப் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்,  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவிலும் நடைபெற்றது.  செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  கமல்ஹாசன் புகைப்படத்தினைப் பகிர்ந்த த்ரிஷா,  "மனதுக்கு நல்லவர்கள் என தோன்றுபவர்கள்,  நம்மை ஊக்குவித்து நம்பிக்கையூட்டும் படியான நபர்கள் சுற்றி இருக்க வேண்டும்" எனக் பதிவிட்டிருந்தார்.  இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement