Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகை த்ரிஷா - வைரல் கிளிக்!

01:48 PM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

நடிகை த்ரிஷா, விஜய்யுடனான புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

விஜயின் 50வது பிறந்தநாளுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  அதில் பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு இருந்தனர்.  அதில் பிரபு தேவா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர் வம்சி என பல பிரபலங்களின் போட்டோக்கள் இணையத்தில் பரவியது.

பிறந்தநாள் முடிய போகும் தருவாயில் நேற்று இரவு கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.  இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப்பதிவில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், " அமைதியில் இருந்து புயலாகவும், புயலுக்கு பின் அமைதியாகவும்.. இதைத் தொடர்ந்து பல மைல்கற்களை அடைய வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.  அதனுடன் த்ரிஷா விஜயுடன் ஃலிப்டில் எடுத்துக் கொண்ட செல்ஃபியை போஸ்ட் செய்துள்ளார்.  இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய்யுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்திருந்தார்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் வெளியா லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்த லியோ படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
actor vijayHBD VijayTrisha Krishnanvijay
Advertisement
Next Article