Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'ஐடென்டிட்டி' படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு!

திரிஷா மற்றும் டொவினோ தாமஸ் இணைந்து நடித்துள்ள ”ஐடென்டிட்டி”திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
05:37 PM Jan 25, 2025 IST | Web Editor
Advertisement

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸும் இணைந்து நடித்துள்ள படம் 'ஐடென்டிட்டி'. இதில் வினய் ராய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அகில் பால், அனஸ்கான் இயக்கியுள்ளனர்.

Advertisement

இந்த படத்தை செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் ராகம் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து ஆக்ஷன் கதைக்களத்தில் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு குற்றத்தை நேரில் பார்க்கும் திரிஷா குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுகிறார். அந்த குழுவில் படம் வரையும் ஆளாக இருக்கிறார் டோவினோ தாமஸ். குற்றவாளி யார், கதையின் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வருகிற 31-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Actor Tovino ThomasIdentitymovieottTrishaVinay Roy
Advertisement
Next Article