For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

GOAT திரைப்படத்தில் த்ரிஷா?...வெளியான புதிய அப்டேட்!

02:22 PM Mar 14, 2024 IST | Web Editor
goat திரைப்படத்தில் த்ரிஷா    வெளியான புதிய அப்டேட்
Advertisement

விஜய்யின் Greatest Of All Time திரைப்படத்தில் நடிகை த்ரிஷா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் ஜெயராம்,  பிரபு தேவா,  மோகன்,  பிரஷாந்த், வைபவ்,  சினேகா,  லைலா,  மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.  நடிகர் விஜய்க்கு இது 68- வது படம் ஆகும்.  தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெங்கட்பிரபு முதன்முறையாக இணைந்துள்ளனர்.  இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.  அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  தி கோட் படத்தின் படப் பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட்டது.  படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. கிளைமேக்ஸ் காட்சிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எடுககப்பட உள்ளன.

இந்த நிலையில்,  கோட் படத்தில் திரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையிலான படப்பிடிப்பு காட்சிகள் ரகசியமாக நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.  விஜய் த்ரிஷா ஜோடிக்கு எப்போதுமே தனிப் பட்டாளமே இருக்கும்.  ஆனால் படக்குழு இதுகுறித்த எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.

Tags :
Advertisement