திரிணாமுல் காங். எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு - டெல்லி உயர் நீதிமன்றம்!
அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு முன்னாள் தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி தனது வருமானத்திற்கு அதிகமாக சுவிட்சர்லாந்தில் சொத்து வாங்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே குற்றம் சாட்டினார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அவர் லக்ஷ்மி பூரியின் கணவரும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருமான ஹர்தீப் சிங்கையும் இந்த எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள் : ‘சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்ற எம்பி ரஷீத் பதவியேற்க தடை இல்லை’ – என்ஐஏ ஒப்புதல்!
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே மீது அவதூறு வழக்கை டெல்லி உயர்ந நீதிமன்றத்தில் முன்னாள் தூதரக அதிகாரி லக்ஷ்மி பூரி 2021ஆம் ஆண்டு தொடுத்தார். இதையடுத்து, ஜூலை 2021ம் ஆண்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அவதூறான ட்வீட்களை நீக்குமாறு கோகலேவுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, தற்போது, அவதூறு வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.