For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மேற்கு வங்கத்தில் NIA அதிகாரிகள் கார் மீது கல் வீசி தாக்குதல்!

10:56 AM Apr 06, 2024 IST | Web Editor
மேற்கு வங்கத்தில் nia அதிகாரிகள் கார் மீது கல் வீசி தாக்குதல்
Advertisement

மேற்கு வங்கத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் குண்டுவெடிப்பு விவகாரத்தை விசாரணை செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு குழுவின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.  

Advertisement

மேற்கு வங்கத்தின் பூர்பா மேதினிபூர் மாவட்டம் பூபதி நகரில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.  இந்த விபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.  3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டனர்.  அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.  இதுகுறித்து பூபதிநகர் போலீசார் தரப்பில்,  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படியுங்கள் : “இந்தியா கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாத போது எப்படி பிரதமரை தேர்ந்தெடுக்க போகிறார்கள்?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி!

சம்பவ இடத்திற்கு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. குண்டு வெடித்தது வீட்டு உபயோக பொருள்களாக இருக்கு வாய்ப்பில்லை,  ஏனென்றால், வெடிப்பு மிகவும் தீவிரமாக இருந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.  குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில்,  2022 ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் வீட்டில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்க ​​தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) குழு இன்று காலை சென்றுள்ளது.  அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் என்ஐஏ குழுவின் கார் மீது செங்கற்கள் வீசி தாக்கியுள்ளனர்.  இதனால், கார்யின் கண்ணாடி சேதமடைந்துள்ளது.  இந்த சம்பவத்தால் இதுவரை காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.  இந்த நடவடிக்கையின் பின்னணியில் எதிர்க்கட்சியான பாஜக இருப்பதாக  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags :
Advertisement