For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்சி விமான நிலைய புதிய முனையம் | சிறப்பம்சங்கள் என்னென்ன?

01:03 PM Jan 02, 2024 IST | Web Editor
திருச்சி விமான நிலைய புதிய முனையம்   சிறப்பம்சங்கள் என்னென்ன
Advertisement

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக இருப்பது திருச்சி பன்னாட்டு விமான நிலையம் தான்.  பல்வேறு நாடுகளுக்குத் திருச்சியிலிருந்து இண்டிகோ,  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்,  மலிண்டோ,  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்,  ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மூலம் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக,  951 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்கும் பணி 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. இப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பணிகள் அனைத்தையும் 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் முடித்து,  புதிய முனையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர விமான நிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது.  ஆனால், கொரோனா பரவல் காரணமாக சுமார் 3 ஆண்டு காலம் பணிகள் முடங்கியதால்,  திட்டமிட்டபடி புதிய முனையத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் திறப்பு விழாவிற்காக 3 முறை திட்டமிட்டும் பணிகள் முடிவடையாத காரணத்தால்,  திறப்பு விழா தேதி தொடர்ந்து மாற்றிவைக்கப்பட்டு வந்தது.  இறுதிக்கட்ட உட்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிவுற்ற நிலையில் இன்று (ஜனவரி 2), திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:

  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த முனையம் 60 ஆயிரத்து 723 ச.மீ பரப்பளவில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.
  • இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பன்னாட்டு பயணிகளையும்,  1500 உள்நாட்டுப் பயணிகளையும் கையாள்வதற்கு ஏதுவாக, குடியேற்றப் பிரிவினருக்கான 40 செக் அவுட் மற்றும் 48 செக் இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • விமானங்களை நிறுத்த 10 ஏப்ரான்கள் மற்றும் ஏரோ பிரிட்ஜ்,  26 இடங்களில் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் ஆகியவை இந்த முனையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • அதே போல சுங்கத் துறையினருக்கென 3 சோதனை மையங்கள் மற்றும் 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள் ஆகியவையும் இந்த முனையத்தில் இடம்பெற்றுள்ளன.
  • இதுதவிர, 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகளும் உள்ளன
  • ஒரே நேரத்தில் 1000 கார்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும் புதிதாக இடம்பெற்றுள்ள இந்த முனையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும், 75 கோடி ரூபாய் செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறையும் கட்டப்பட்டுள்ளது.
Advertisement