For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சுட்டுக் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு அஞ்சலி... மணிப்பூரில் தொடரும் பதற்றம்!

11:01 AM Nov 14, 2024 IST | Web Editor
சுட்டுக் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களுக்கு அஞ்சலி    மணிப்பூரில் தொடரும் பதற்றம்
Advertisement

தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்து மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Advertisement

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குக்கி மக்களுக்கு இடையேயான இனக்கலவரம், கடந்தாண்டு முதல் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையால் இதுவரை 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இச்சூழலில் கடந்த சில நாட்களாக ஜிரிபாம் பகுதியில் குக்கி கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் காவல் நிலையங்கள் மீதும், பாதுகாப்பு படையினரின் முகாம்களின் மீதும் குக்கி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறி, பாதுகாப்பு படையினர் 11 பேரை என்கவுண்ட்டர் செய்தனர்.

இந்த மோதலுக்கு இடையே மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் என 6 பேரை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதில் இரண்டு வயது குழந்தையும் அடங்கும். மேலும் இரண்டு முதியவர்களை உயிருடன் வைத்து எரித்தனர். இவ்வாறு தொடர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிரிபாம் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் வன்முறை சம்பவங்களை கண்டித்தும், 6 பணய கைதிகளை மீட்க வலியுறுத்தியும் சர்வதேச அமைதி மற்றும் சமூக முன்னேற்றம், பழங்குடிகள் சங்கம், மாணவர் சங்கம் உள்பட 13 அமைப்புகள் மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இந்த முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. தலைநகர் இம்பால் உள்பட மாநிலம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பூட்டப்பட்டன. வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மணிப்பூருக்கு கூடுதலாக 2 ஆயிரம் படை வீரர்களை மத்திய அரசு அனுப்பியது.

மத்திய ஆயுத காவல் படையை சேர்ந்த 19 ஆயிரத்து 800 வீரர்கள் ஏற்கனவே மணிப்பூரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 2 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 1,500 வீரர்கள், எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த 500 வீரர்கள் என மொத்தம் 2 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதியன்று மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட 10 குக்கி “கிராம தன்னார்வலர்களுக்கு” மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்துவதற்காக மிசோரமின் மிகப்பெரிய சமூக அடிப்படையிலான தன்னார்வ அமைப்பு ஐஸ்வாலில் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

மிசோரமின் மிகப்பெரிய சமூக அடிப்படையிலான தன்னார்வ அமைப்பு ஐஸ்வாலில் ஏற்பாடுகள் செய்து வருகிறது. யங் மிசோ அசோசியேஷன் (ஒய்எம்ஏ) என்ற அமைப்பு, இறந்தவர்கள் "அப்பாவிகள்" என்று கூறியது, நடைபெற்ற சம்பவம் "கொலைகள்" என்று கண்டித்து, இந்தக் கொலைகள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது.

மேலும் கொல்லப்பட்ட "அப்பாவி சகோதரர்களின்" குடும்பங்களுக்கு நிதி ரீதியாக இழப்பீடு வழங்குதல் மற்றும் மணிப்பூர் அமைதியின்மையை விரைவில் தீர்க்கவும் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே அசாமில் இருந்து மிசோரம் வழியாக இறந்தவர்களின் உடல்கள் மணிப்பூருக்குகொண்டு செல்லப்பட உள்ளன.

இதுதொடர்பாக ஒய்.எம்.ஏ.வின் பொதுச் செயலாளரான பேராசிரியர் மல்சவ்ம்லியானா, அசாமில் இருந்து உடல்கள் வரும்போது ஐஸ்வாலில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இறந்தவரின் இறுதிச் சடங்குகள் மிசோரமில் உள்ள ஐஸ்வாலில் இருந்து 12 மணி நேர பயணத்தில் உள்ள சுராசந்த்பூரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement