Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மரம் வெட்ட வந்த 2 பேரை அம்பு எய்து கொலை செய்த #Tribals! எங்கு தெரியுமா?

12:11 PM Sep 05, 2024 IST | Web Editor
Advertisement

பெருவின் அமேசானில் வாழும் மாஷ்கோ பைரோ பழங்குடியினர் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி இரண்டு மரம் வெட்டுபவர்களைக் கொன்றனர்.

Advertisement

வெளி உலகுடனான தொடர்பை தவிர்த்து காட்டில் தனியாக வாழும் பழங்குடியின மக்கள் பலரை பற்றி, நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்டவர்கள் உண்மையில் வாழ்கிறார்கள் என்றால் நமக்கு ஆச்சரியந்தான் எழும்.

தென்னமெரிக்காவின் பெரு பகுதியில் இருக்கும் அமேசான் காட்டில் மாஷ்கோ பைரோ என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வெளியுலக மக்களுடன் அதிகம் தொடர்பு கொள்வதில்லை. அப்படியே தொடர்பு கொண்டாலும், அமேசான் காட்டின் நுழைவுப் பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் யாசகம் பெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டு மரம் வெட்டும் நபர்களை அவர்கள் வைத்திருந்த அம்பால் வில் எய்து கொன்றுள்ளனர். அவர்களின் நிலத்தை மரம் வெட்டும் நபர்கள் ஆக்கிரமித்ததாக கூறி கொன்றுள்ளனர். மேலும் 2 மரம் வெட்டுபவர்களும் மாயமாகி உள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். அமேசான் படுகையில் உள்ள Madre de Dios பகுதியின் நதி மற்றும் துணைநதிகளை பாதுகாக்கும் அமைப்பான FENAMAD இந்த செய்தியை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு பெருவில் வாழும் பழங்குடியின மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கிறது.

மரம் வெட்டுபவர்களுக்கும், பழங்குடியினர்களுக்கும் இதுபோன்று அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருவதாகவும், இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

Tags :
AmazonFENAMADMashco Piroperu
Advertisement
Next Article