For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் - வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பூரில், வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியின நபர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
08:34 PM Jul 31, 2025 IST | Web Editor
திருப்பூரில், வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியின நபர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம்   வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகம், மேல் குருமலையைச் சேர்ந்த மாரிமுத்து (40) என்பவர் புலிப்பல் வைத்திருந்ததாகக் கூறி, வனத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், உடுமலை வனத்துறை அலுவலகத்திலேயே அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து போலிசார் இச்சம்வம் குறித்து விசாராணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

Advertisement

”திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரிமுத்து என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட திரு. அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அடுத்த அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் துவங்கியுள்ளது.

மேலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தியதாக திரு. மாரிமுத்து மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கடந்த 29 ஆம் தேதி நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததாகவும் செய்திகள் உலா வரும் நிலையில், அன்று மாலையே அவரை வேறு ஒரு வழக்கில் வனத்துறை கைது செய்துள்ளதைப் பார்த்தால், ஏதோவொரு பழிவாங்கும் நடவடிக்கை போலத் தெரிகிறது.

காரணம், திமுக ஆட்சியில் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்தால் லாக்-அப் மரணங்கள் பெருகி வருவதையும், அரசு அதிகாரிகள் உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அதை மூடி மறைக்க முயற்சிப்பதையும் நாம் பலமுறை கண்டுள்ளோம். இனியும் இதுபோன்ற அராஜகங்கள் தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது.

எனவே, உயிரிழந்த திரு. மாரிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அரசு அதிகாரிகள் சமபந்தப்பட்டுள்ள இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டுமெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர்களை வலியுறுத்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement