For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சோதனையான காலகட்டம் - 6 புதிய கலைகளை கற்றுக் கொண்ட சமந்தா!

08:05 AM Jul 17, 2024 IST | Web Editor
சோதனையான காலகட்டம்   6 புதிய கலைகளை கற்றுக் கொண்ட சமந்தா
Advertisement

சோதனையான காலகட்டத்தில் அம்பு எய்தல், குதிரை ஏற்றம் உள்ளிட்ட 6புதிய கலைகளை கற்றுக் கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி பாதிப்பில் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து தன் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவரும் சமந்தா, தனது யூடியூப் சேனலில் உடல் மற்றும் மன நலன் குறித்த பாட்காஸ்ட் வீடியோக்களை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார்.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டுக்கு மேலாக  சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.  இதையடுத்து, ஆயுர்வேதா சிகிச்சை எடுத்து வந்தார்.  இந்த நிலையி; கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய சமந்தாவிற்கு வாழ்த்தை தெரிவித்து அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரிப்பில் "மா இண்டி பங்காரம்" என்ற திரைப்படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த சமந்தா தெரிவித்ததாவது..

கடந்த 3 வருடங்களாக நான் பல பிரச்னைகளை சந்தித்தேன். ஆனால் இந்தப் பிரச்னைகளால் எனக்கு பல நன்மைகளும் நடந்துள்ளன. கஷ்டங்கள் வரும்போது நாம் புதியதாக கற்றுக்கொள்கிறோம். இந்த காலகட்டத்தில் நான் புதியதாக 6 திறமைகளைக் கற்றுக் கொண்டேன்.

சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் நடிகை சமந்தா! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! - News7 Tamilதற்காப்பு கலைகள், அம்பு எய்தல், கத்தி சண்டை, குதிரை ஏற்றம், பாலட் என பல புதுமையான வித்தைகள் மற்றும் பயிற்சிகளை கற்றுக்கொண்டேன். புதியதாக கற்றுக்கொள்வது எப்போதும் எனக்கு பிடித்தமானது. ஆன்மிகம்தான் எனக்கு புதிய சக்தியை கொடுத்தது. ஆன்மிகம் எனது வாழ்க்கையில் ஒருங்கிணைத்துவிட்டது. அது எனது பணியில் நல்ல மாற்றங்களைக் கொடுத்தது. தற்போதைய சோதனையான கால கட்டத்தில் பல வலிகள், நோய்கள் இருக்கும்பட்சத்தில் எதைவிடவும் ஆன்மிகம் மிகவும் தேவையானதாக இருக்கிறது”  என சமந்தா தெரிவித்தார்.

Tags :
Advertisement