For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வானவேடிக்கை காட்டிய டிராவிஸ் ஹெட்: டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத் அணி!

09:32 PM Apr 20, 2024 IST | Web Editor
வானவேடிக்கை காட்டிய டிராவிஸ் ஹெட்  டெல்லி அணிக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத் அணி
Advertisement

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 266 ரன்களை குவித்தது. டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 89 ரன்களைச் சேர்த்தார்.

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 35 வது லீக் போட்டியாக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர்.

ட்ராவிஸ் ஹெட் வெறும் 16 பந்துகளில் பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 52 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, குல்தீப் யாதவின் பந்து வீச்சில் மார்க்ரம் விக்கெட்டை பறிகொடுத்தார்.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8.4 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக விளையாடி வந்த ட்ராவிஸ் ஹெட் குல்தீப் யாதவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து, அக்ஸர் படேல் பந்தில் கிளாசென் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 10 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக விளையாடி வந்த நிதிஷ் ரெட்டி 37 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 19 ஓவர்கள் முடிந்த நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 250 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் சமத் 13 ரன்களுக்கும், கம்மின்ஸ் 1 ரன்னுக்கும் அவுட்டாகினர். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. எனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.  

Tags :
Advertisement