Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணம் செய்யும் திட்டம்- விரைவில் அறிமுகம்

10:27 AM Jul 09, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் திட்டத்திற்கான செயலியை உருவாக்க Moving Tech Innovations Private Limited நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கி உள்ளது.

அதன்படி முதற்கட்டமாக, இந்தாண்டு டிசம்பர் மாதம் சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் நடைமுறைபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தபடும். நீண்ட நாட்களாக பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சென்னையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் உள்ளிட்ட 3 போக்குவரத்து வசதிகள் இருக்கக்கூடிய நிலையில் இந்த மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகின்றனர். இத்தகைய பயண சீட்டிற்கு மாற்றாக இவை அனைத்தும் ஒரே பயண சீட்டாக கொண்டுவர கூடிய வகையில் இந்த நடைமுறை மேற்கொள்ள பட உள்ளது.

Tags :
BUSChennaielectric trainMetroOne Ticket
Advertisement
Next Article