தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 60 நாட்களாக அதிகரிப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. பயணிகளின் வசதிக்காக இன்று (மார்ச் 15) முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் கவனத்திற்கு...!https://t.co/WciCN2SQmv | #Transportation | #TNSTC | #TamilNadu | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/BYEjZD0YPR
— News7 Tamil (@news7tamil) March 15, 2024
எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.