For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேலைநிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு!

12:02 PM Jan 09, 2024 IST | Jeni
வேலைநிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு
Advertisement

காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Advertisement

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனிடையே போக்குவரத்து தொழிற்சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பது சட்டவிரோதம் என்றும், அவசர வழக்காக இதனை விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள் : அரசுப் பேருந்தை இயக்கிய அனுபவமற்ற ஓட்டுநர் – நடுவழியில் பேருந்தை தள்ளிச் சென்ற பயணிகள்!!

இந்நிலையில், வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் 02.15 மணியளவில் அவசர வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.

Tags :
Advertisement