Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பயணிகளிடம் சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது - நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு!

04:17 PM Nov 01, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளிடம் பயணச்சீட்டுக்காக சில்லறை கேட்டு நிர்பந்திக் கூடாது என போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில்,  பயணிகள் பேருந்தில் ஏறும் போதே பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனும் வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு வந்தது.

இந்நிலையில் பேருந்துகளில் பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டினை வழங்க,  அவர்கள் கொடுக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதத்தொகையை வழங்க வேண்டும் என நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது

பணிமனைகளில் பணியின் போது நடத்துநர்களுக்கு வழங்கப்படும் முன்பணத்தை பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாக பயன்படுத்தவும்,  பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை வலியுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: “2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவதே அதிமுகவின் இலக்கு” – திண்டுக்கல் சீனிவாசன்

மேலும் பேருந்துகளில் பயணிகள் ஏறும் போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யக்கூடாது  எனவும் இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது.

Tags :
ConductorsOrderpassengersTamilNaduTicketTNGovtTNSTCTransport
Advertisement
Next Article