For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

08:24 PM Jan 20, 2024 IST | Web Editor
6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்   தமிழ்நாடு அரசு உத்தரவு
Advertisement

6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு அரசு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி,தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக எல்.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாகத்துறை ஆணையராக கே.எஸ்.பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். மீன் வளத்துறை ஆணையராக சுஞ்சோங்கம் ஜாதக் சிரு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக ஆர்.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement