தமிழ்நாட்டில் 45 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!
சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்கள் உள்பட 35 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்த நிலையில், தற்போது மேலும் 10 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு முழுவதும் உள்ள 35 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து இன்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேலும் 10 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மொத்தமாக 45 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதியதாக இடமாற்றம் செய்ப்பட்டுள்ள 10 டிஎஸ்பிக்கள் பட்டியல் பின்வருமாறு:
36. மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த கணேசன் திருநெல்வேலி நகர நில அபகரிப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம்.
37. திண்டுக்கல் மாவட்ட பழனி டிஎஸ்பியாக இருந்த ஆர்.சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
38. விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுரேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக மாற்றம்.
39. கடலூர் மாவட்ட நெய்வேலி டிஎஸ்பியாக இருந்த ராஜ்குமார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி டிஸ்பியாக மாற்றம்.
40. கடலூர் மாவட்ட திட்டக்குடி டிஎஸ்பியாக இருந்த காவ்யா சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக மாற்றம்.
இதையும் படியுங்கள்: 35 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் | டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
41. தர்மபுரி மாவட்ட டிஎஸ்பியாக இருந்த செந்தில் குமார் திருப்பூர் நகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக மாற்றம்.
42. திருப்பூர் மாவட்ட அவினாசி டிஎஸ்பி பால்ராஜ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
43. புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி டிஎஸ்பியாக இருந்த தீபக் ரஜினி தமிழ்நாடு க்யூ பிரிவு டிஎஸ்பியாக மாற்றம்.
44. ராமநாதபுரம் மாவட்ட கமுதி டிஎஸ்பியாக இருந்த மணிகண்டன் திருவாரூர் டிஎஸ்பியாக மாற்றம்.
45. காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த வெங்கடகிருஷ்ணன் ராணிப்பேட்டை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு டிஎஸ்பியாக மாற்றம்.