Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Tram சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு! - பொதுமக்கள் அதிர்ச்சி!

09:28 AM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளது. 

Advertisement

கொல்கத்தாவில் 150 வருடங்களாக இயங்கி வந்த டிராம் சர்வீஸ் நிறுத்தப்படுவதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் டிராம் சர்வீஸ் கடந்த 1873 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இந்த டிராம் சர்வீஸ் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் டிராபிக் பிரச்சனை மற்றும் சில காரணங்களால் டிராம் சர்வீஸ் நிறுத்தப்படுவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி செய்துள்ள நிலையில் சமூக வலைதளங்கள் கொல்கத்தா மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

கொல்கத்தாவின் கலாச்சாரமாகவும் அடையாளமாகவும் இருந்த டிராம் சர்வீஸ் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மீண்டும் அதை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 150 ஆண்டு கால வரலாறு இருக்கும் டிராம் சர்வீஸை நிறுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு சிலர் இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். தற்போதைய வேகமான உலகத்தில் டிராம் சர்வீஸ் போன்ற மெதுவான போக்குவரத்து தேவையில்லை என்றும் மேற்கு வங்க அரசு எடுத்தது சரியான முடிவுதான் என்றும் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் கொல்கத்தா டிராம் பயனாளிகளின் சங்கம் இது குறித்து கூறிய போது உலகம் முழுவதும் 450 நகரங்களில் இந்த டிராம் சர்வீஸ் இருப்பதாகவும், ஏற்கனவே நிறுத்தப்பட்ட பின் மீண்டும் 70 நகரங்களில் இந்த சர்வீஸ் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் எனவே கொல்கத்தாவில் இந்த சர்வீஸ் நிறுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளது.

Tags :
CalcuttaTrafficTramWest bengal
Advertisement
Next Article