For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி | விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்!

03:50 PM Jul 17, 2024 IST | Web Editor
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி   விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்
Advertisement

பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கதேகர் குறித்து புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Advertisement

மகாராஷ்டிராவை சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கதேகர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் விசாரணையில் உள்ளன. புனே மாவட்டத்தில் பணியாற்றிய போது தனது சொந்த வாகனத்தில் அரசு ஊழியருக்கான அடையாள பலகை வைத்தது, சைரன் பொருத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

மேலும், ஐஏஎஸ் தேர்விலும் சலுகைகளை பெற தனது குடும்ப வருமானத்தை மறைத்து ஓபிசி சான்றிதழ் வழங்கியது மற்றும் உடல் குறைபாடு கொண்டவர் என போலி ஆவணம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைத்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கதேகர் குறித்து புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர், போலி முகவரி மற்றும் ரேஷன் கார்டு மூலம் மாற்றுத்திரனாளி சான்றிதழை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், யஷ்வந்த்ராவ் சவான் மெமோரியல் (ஒய்சிஎம்) மருத்துவமனையின் முகவரியை 'பிளாட் எண். 53, தேஹு-ஆலந்தி, தல்வாடே' என்று பூஜா வழங்கியிருந்தார். இது பிம்ப்ரி-சின்ச்வாட்டில் உள்ள தனது வீடு என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த முகவரி பூஜா கதேகர்க்கு செந்தமான தெர்மோவெரிடா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது, அது இப்போது மூடப்பட்டது. இது தவிர தெர்மோவெரிட்டா நிறுவனத்தின் பெயரில் ஆடி காரை அவர் பதிவு செய்டுள்ளார். பிம்ப்ரி-சின்ச்வாட் நகராட்சியின் வரி வசூல் துறையின்படி, இந்த நிறுவனத்தின் மேல் கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.2.7 லட்சம் வரி நிலுவையில் உள்ளது.

இந்த ஆவணங்களில் நிறுவனத்தின் முகவரியைப் பயன்படுத்தி போலி ரேஷன் கார்டு தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. மாற்றுத்திரனாளி சான்றிதழை பெற கேத்கர் இந்த ரேஷன் கார்டையே பயன்படுத்தினார். ஆகஸ்ட் 24, 2022 அன்று வழங்கப்பட்ட சான்றிதழில், அவருக்கு முழங்காலில் ஏழு சதவீத செயல்படாமல் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், போலி சான்றிதழின் குற்றச்சாட்டுகளுடன், சலுகைகளை கோருதல் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அச்சுறுத்துதல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளையும் பூஜா கேத்கர் தற்போது எதிர்கொள்கிறார்.

இதனிடையே, பூஜா கதேகர் உடனடியாக பயிற்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக மிசௌரி பயிற்சி மையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Tags :
Advertisement