தீபாவளியை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்.... 3 நாட்கள் முன்பதிவு நடைபெறும் என அறிவிப்பு...
தீபாவளியை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கி 3 நாட்கள் முன்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தீபாவளி பண்டிகை ஆனது அக்.31 தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் வெளியூர்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளிலும், ரயில்களிலும் செல்வது வழக்கம்.
இவ்வாறு அதிகப்படியான மக்கள் செல்வதால் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்களும் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும்.இவ்வாறு சிறப்பு ரயில்களை விட்டால் கூட மக்கள் கூட்டத்திற்கு ஈடு செய்ய முடியாது. இதனால் பலர் தீபாவளிக்கு செல்வதற்கு முன்பெ டிக்கெட்டை ரிசர்வ் செய்து விடுவது சிறந்தது. ரயில்களில் 120 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
அதன்படி, அக்.28இல் பயணிக்க விரும்புவோர் இன்று முன்பதிவு செய்யலாம். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிக முன்பதிவு நடக்கும் என்பதால் முன்பே திட்டமிட்டுக்கொள்ளவும்.