Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தூத்துக்குடியில் இருந்து நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்!

04:19 PM Dec 21, 2023 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் நிறுத்திவைக்கப்பட்ட ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள வெள்ளத்தாலும், இருப்புப் பாதைகள் சேதங்களினாலும் தென் மாவட்டங்களில் ரயில்சேவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படவிருந்த 24 ரயில்கள் செய்யப்பட்டன. செங்கோட்டை, வாஞ்சி, மணியாச்சி, சென்னை, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளதால்,  தூத்துக்குடியில் கனமழையால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை நாளை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூருக்கு ஒரு வாரத்தில் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Tags :
ChennaiNellaiNews7Tamilnews7TamilUpdatesthirunelveliThoothukudiTrainTuticorin
Advertisement
Next Article