சேலம், திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு: முழு விவரம்!
சேலம் மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்களில் ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்கள்;
முழுமையாக ரத்து
கன்னியாகுமரி - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்து
1. மதுரை - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகிற மே 1 முதல் 5 வரையிலும், மே 9 முதல் 15 வரையிலும் போத்தனூர் - கோவை இடையே பகுதியாக ரத்து. அதேபோல மே 6 முதல் 8 வரை பொள்ளாச்சி - கோவை இடையே பகுதியாக ரத்து.
2. மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகிற மே 5,7,12 ஆகிய நாட்களில் மயிலாடுதுறை - கும்பகோணம் இடையே பகுதியாக ரத்து.
3. சென்னை எழும்பூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகிற மே 24 அன்று சாலக்குடி - குருவாயூர் இடையே பகுதியாக ரத்து.
4. ஹவுரா - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் வருகிற ஜூன் 6 ஆம் தேதி வள்ளியூர் - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து.
5. தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 6 ஆம் தேதி நெல்லை - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து.
6. நாகர்கோவில் - தாம்பரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி நாகர்கோவில் - நெல்லை இடையே பகுதியாக ரத்து.
7. நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி நாகர்கோவில் - வள்ளியூர் இடையே பகுதியாக ரத்து.
8. திருவனந்தபுரம் - திருச்சி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி திருவனந்தபுரம் - நெல்லை இடையே பகுதியாக ரத்து.
9. திருச்சி - திருவனந்தபுரம் இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி நெல்லை - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து.
ரயில் சேவையில் மாற்றம்
நெல்லை - பிசால்பூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் ஜூன் 11 ஆம் தேதி போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.