வெளியானது #KadhalikkaNeramillai படத்தின் டிரெய்லர்!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரதர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : #Tharunam திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏ. ஆர், ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்குதடி’ பாடல் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்தது.
#KadhalikkaNeramillai Trailer 💜♥️
Link 🔗 https://t.co/aShFS7w0fa
— Jayam Ravi (@actor_jayamravi) January 7, 2025
தொடர்ந்து, இரண்டாவது பாடலான, ‘லாவண்டர் நிறமே’ மற்றும் ‘பிரேக் அப் டா’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது முழுமையான பாடல்கள் அடங்கிய ஜுக் பாக்ஸ் வெளியாகியுள்ளது. அத்துடன் படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது.