திருப்பதியில் பரிதாபம்... 5வது மாடியின் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்து 3 தொழிலாளிகள் உயிரிழப்பு!
திருப்பதி மங்கலம் அருகே துடே குடியிருப்பு பகுதியில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகின்றன. இன்று வழக்கம் போல் பணிகள் நடைபெற்ற போது, ஐந்தாவது மாடியில் கட்டப்பட்டிருந்த சாரம் மீது நின்று தொழிலாளர் மூன்று பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சவுக்கு கட்டையால் கட்டப்பட்ட சாரம் சரிந்து தொழிலாளர்கள் மூன்று பேரும் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், மரணமடைந்த தொழிலாளர்கள் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐந்தாவது மாடியில் அந்தரத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தவிர்க்க வசதியாக கட்டிட உரிமையாளர் தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மரணமடைந்த தொழிலாளர்கள் வசந்த், ஓங்கோல் சீனு, தோட்டி ஸ்ரீனிவாசலு ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.