திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் விபரீதம்! சிங்கம் தாக்கி இளைஞர் மரணம்!
10:47 PM Feb 15, 2024 IST
|
Web Editor
இந்நிலையில் அங்கிருந்த சிங்கம், அந்த இளைஞரை தாக்க முயன்றுள்ளது. இதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் சிங்கத்தின் பிடியில் இருந்து இளைஞரை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அந்த சிங்கம் அவரது கழுத்துப் பகுதியில் கடித்து குதறியுள்ளது. இதனால் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் தடுப்புகளை தாண்டிச் சென்ற இளைஞரை சிங்கங்கள் கடித்து குதறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இளைஞர் ஒருவர் சிங்கங்கள் நடமாடும் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளைத் தாண்டி அந்த இளைஞர் உள்ளே குதித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த சிங்கத்தின் பராமரிப்பாளர்கள் அதனை கூண்டுக்குள் அடைத்தனர். இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரின் அடையாள அட்டை தற்போது கிடைத்துள்ளதாகவும், அதை வைத்து அவரது உறவினர்களை கண்டறிந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Article