Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவொற்றியூரில் ரூ.3000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்தல்...3 இளைஞர்கள் கைது!

10:05 AM Apr 13, 2024 IST | Web Editor
Advertisement

திருவொற்றியூரில் ரூ.3000 மதிக்கத்தக்க போதை மாத்திரை வைத்திருந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். 

Advertisement

திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே திருவெற்றியூர் காவல் நிலைய
உதவி ஆய்வாளர் நவீன் குமார் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் உதவி ஆய்வாளர் நவீன் குமார் சோதனை செய்தார்.

இதையும் படியுங்கள் : ஐ.பி.எல் 2024 | பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல்!

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் வந்துள்ளனர்.  உதவி ஆய்வாளர் அந்த வண்டியை நிறுத்தி சோதனை செய்தார்.  அவர்கள் ரூ.3000 மதிக்கத்தக்க போதை மாத்திரைகள் வைத்திருப்பது கண்டறியபட்டது.  பின்னர் அந்த 3 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த 3 இளைஞர்களையும் திருவெற்றியூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  அப்போது அவர்கள் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நரேஷ்பாபு(24),  லாசர்(22),  ஜெகதீஷ்(23) என்பது தெரிய வந்தது.  இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
arrestedChennaiDrugsPolicetiruvottiyurTraffickingyouths
Advertisement
Next Article