Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Chennai | நாளை காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு | போக்குவரத்து மாற்றம்!

03:29 PM Oct 20, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் நாளை காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில், நாளை (அக். 21) காவலர் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

1). சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரனீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில், இடதுபுறம் திரும்பி காரனீஸ்வரர் பக்கோடா தெரு- அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். எதிர் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

2). MRTS X R.K.SalaiJn ஐத் தாண்டி காந்தி சிலைக்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. காவலரின் நீர்த்தார் நினைவு நாள் அணிவகுப்பு நேரத்தில், மாற்று வழியாக அந்த வாகனங்கள் லைட் ஹவுஸ் MRTS சாலை வழியாக சென்று லாயிட்ஸ் சாலை காமராஜர்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

3). மயிலாப்பூரில் இருந்து பாரிஸ் நோக்கி வரும் MTC பேருந்து (21G) ராயப்பேட்டை 1 பாயின்ட் -மியூசிக் அகாடமி பாயின்ட்- TTK சாலை -இந்தியன் வங்கி - ராயப்பேட்டை நெடுஞ்சாலை - GRH பாயிண்ட் - அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

4).கதீட்ரல் ரோடு லைட் ஹவுஸ் நோக்கி வரும் MTC பேருந்து (27D), V.M தெருவில் திருப்பிவிடப்பட்டு லஸ் சந்திப்பு - லஸ் சர்ச் சாலை - ஸ்லிவா சாலை- D' பக்த்வச்சலம் சாலை- Dr.ரங்கா சாலை - பீமனா கார்டன் Jn - CP ராமசாமி சாலை - சீனிவாசன் தெரு- R.K மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

5).காமராஜர் சாலை (நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வர்த்தக மற்றும் கனரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiPoliceTraffictraffic change
Advertisement
Next Article