For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இந்தியாவுடனான அமெரிக்காவின் வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு" - டிரம்ப் கடும் விமர்சனம்!

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
09:08 PM Sep 01, 2025 IST | Web Editor
இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
 இந்தியாவுடனான அமெரிக்காவின் வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு    டிரம்ப் கடும் விமர்சனம்
Advertisement

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு என கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்காகச் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,

இந்தியாவுடன் அமெரிக்கா மிகக் குறைந்த வணிகம் செய்கிறது. ஆனால் இந்தியா எங்களுடன் மிகப்பெரிய அளவிலான வியாபாரம் செய்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்தியா அமெரிக்காவிடம் அதிக பொருள்களை விற்கிறது . ஆனால், எங்களிடமிருந்து குறைவாகவே வாங்குகிறது. இந்தியாவிடம் இப்போது வரை ஒருதலைபட்சமான வணிக உறவே நீடித்து வருகிறது.

இந்தியா எங்களிடம் அதிக வரியை வசூலிக்கிறது. இதனால், எங்கள் பொருள்களை இந்தியாவில் வணிகம் செய்ய முடியவில்லை. இது முழுவதும் ஒருதலைபட்சமான பேரழிவு. அமெரிக்காவின் மீதான வரியைக் குறைக்க இந்தியா முன்வருகிறது. ஆனால், இது மிகவும் தாமதம். இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்”

என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி  இந்தியப் பொருட்களின் மீதான வரியை  மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது விதிக்கப்பட்ட மொத்த வரியானது 50 சதவீதமாக உயர்ந்தது.

Tags :
Advertisement