கேரள முதலமைச்சராக #TovinoThomas? வெளியான புதிய அப்டேட்!
பிரித்விராஜ் இயக்கும் 'எம்புரான்' படத்தில் கேரள முதலமைச்சராக டோவினோ தாமஸ் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான, ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலித்தது. தற்போது இவர் ‘எம்புரான்’ திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். பிருத்விராஜ் எம்புரான் படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டொவினோ தாமஸ் கேரள மாநிலத்தின் இளம் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லூசிஃபர்’ படத்தில் நடிகர் டோவினோ தாமஸ் கேரள முதலமைச்சரின் மகனாக ஜித்தின் ராமதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.