For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் - யார் தெரியுமா?

07:12 PM Feb 09, 2024 IST | Web Editor
4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள்   யார் தெரியுமா
Advertisement

கொரோனா பெருந்தொற்று காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Advertisement

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பல நாடுகள் தங்களது எல்லைகளையும், சுற்றுலா பயணிகளுக்கும் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சில நாடுகளை சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்திற்கு தளர்வுகளை அறிவித்தது.

அதனைத் தொடந்து வந்த உருமாறிய கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் போன்ற வைரஸ் காரணமாக மீண்டும் பழைய பொது முடக்கம் ஏற்படுமோ என பலரும் அஞ்சினர். இதனால்  இன்னும் சில நாடுகள் தங்களது நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதை நிறுத்தி வைக்கும் முடிவை நீட்டித்து வந்தனர்.

கொரோனா பெருந்தொற்றினால் 4 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது. ஹாங்காங்-சென்னை இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் தான் விமான சேவைய தொடங்கியது.

இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தொடங்கி தனது எல்லைகளை வெளிநாட்டு பயணிகளுக்காக திறக்காதிருந்த வட கொரியா முதன்முறையாக பயணிகளை வரவேற்றுள்ளது. ரஷ்யாவில் இருந்து  வட கொரியாவின் தலைநகரை நோக்கி புறப்பட்ட பயணிகள் இன்று வட கொரியாவை அடைந்தனர்.  இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த செப்டம்பர் சந்திப்புக்குப் பிறகு இந்த பயணம் சாத்தியமாகியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ரஷ்யர்களால் செல்ல முடியாத நிலை உண்டானது.  இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், வடகொரியாவைச் சுற்றுலாவுக்கான தளமாக பரிந்துரைத்தார்.

இதுவரை தென்கொரிய மற்றும் வடகொரிய அரசுகள் கோவிட்-19க்குப் பிறகு எந்த சுற்றுலா பயணிகளையும் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில்தான் இந்த பயணம் சாத்தியமாகியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து சென்றுள்ள பயணிகள் வடகொரிய தலைநகர் பியோங்யாங் சென்றுள்ளனர்.  வடகொரியாவில் சிறப்பு பெற்ற பனிச்சறுக்கு மீதான ஆர்வத்தால் அவர்கள் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு பிறகு வடகொரியாவுக்கு சுற்றுலா செல்லும் நாடாக ரஷ்யா உள்ளதால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் ஆயுத பரிமாற்றம் குறித்து அரசியல் விமர்சர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Tags :
Advertisement