விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்று குற்றாலம். குற்றாலம் மெயின், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பணளிகள் வருகைத் தருவது வழக்கம். இப்பகுதிகளுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பலர் வருகை தருவர். இந்த சூழலில் குற்றால அருவிகளில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது.
இதனையொட்டி சுற்றுலாப் பயணிகளின் வருகை களைகட்டியுள்ளது. அதன்படி, விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று காலை முதலே குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளுமே சுற்றுலா பயணிகள் வருகைத் தர தொடங்கினர்.
அந்த வகையில், ஐந்தருவிக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் நீரில் ஆனந்த குளியல் இட்டு மகிழ்ந்தனர். விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.