Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெள்ளப்பெருக்கால் பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!

09:42 PM Jun 12, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மற்றும் தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடையில் அளவுக்கதிகமான  சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தற்போது சில தினங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து
அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதுபோல ஆரியங்காவு பகுதியில் உள்ள பாலருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்நிலையில் தற்போது மழை தீவிரமடைந்துள்ளதால் பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க கேரளா வனத்துறை  தடை விதித்துள்ளது. தண்ணீர் விழக்கூடிய தடாகம் பகுதியில் தண்ணீரின் அழுத்தம் அதிகரித்து உள்ளதால் வனத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த பகுதியில் தண்ணீர் குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் என்பது ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் இப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Tags :
banFloodpalaruviTourists
Advertisement
Next Article