For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை - சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்!

09:30 PM Dec 25, 2023 IST | Web Editor
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை    சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்
Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன.

Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ்ஸை கொண்டாடும் வகையில், சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால், கடந்த 2 நாட்களாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் நிரம்பி காணப்படுகின்றன.

திற்பரப்பு அருவி

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரின் அழகை காணவும், கிறிஸ்துமஸை கொண்டாடவும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இயற்கை அழகை ரசித்தும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சியடைந்தனர்.

குளச்சல் நடுக்கடல்

மேலும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், கன்னியாகுமரி குளச்சல் நடுக்கடலில் அனைத்து மதத்தினறும் நடுக்கடலில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

உதகை

உதகையின் முக்கிய சுற்றுலா தலமான அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இதே போல், உதகை படகு இல்லம், உதகை - கூடலூர் சாலையிலுள்ள பைன் பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் ஆகிய சுற்றுலா தலங்களிலும் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது.

உதகை மட்டுமின்றி குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி, முதுமலை உட்பட பல்வேறு இடங்களிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

பழவேற்காடு ஏரி

பழவேற்காடு ஏரியின் அழகு மற்றும் பறவைகளை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

ஆரோவில் கடற்கரை

ஆரோவில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்களது விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.

Tags :
Advertisement