குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர்
கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்து கொட்டி வரும் சூழலில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலைப்பகுதிகளில் மழையானது குறைந்து அருவிகளில் தண்ணீர் குறையும்
பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என காவல்துறை
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், குற்றால அருவிகளில் விதிக்கப்பட்டுள்ள
இந்த தடையால் குற்றாலம் பகுதியே களையிழந்து காணப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது.
ரூபி.காமராஜ்