Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூப்பர் 8 சுற்று - இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு!

08:14 PM Jun 22, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

Advertisement

ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. மொத்தமாக 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்றைய போட்டியில் இந்தியா அணியும், வங்கதேசம் அணியும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : “பவதாரிணியின் குரலை இப்படி பதிவு செய்வேன் என நினைக்கவில்லை” - 'The GOAT' படப் பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா உருக்கம்!

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. வங்கதேச அணியில் டஸ்கின் அகமது இன்றையப் போட்டியில் விளையாடவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BangladeshBANvsINACricketIndiaINDVsBANmatchT20WorldCup
Advertisement
Next Article